Loading...
 

விவாதங்களுக்கான ஊக்கம்

 

"Agora Speakers International என்பது உலகளாவிய அளவில் இலாப நோக்கமின்றி இயங்கி வரும் பேரார்வமிக்க தொண்டர்களின் சங்கமாகும், இது மக்கள் தங்கள் பொது சொற்பொழிவு, தகவல்தொடர்பு, விமர்சன ரீதியான சிந்தனை, விவாதம் மற்றும் தலைமைத்துவ திறன்கள் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள உதவுகிறது."

Agora Speakers -இல் விவாதம் என்பது நோக்க பிரகடனத்தின் முதலே இருந்து வருகிறது. இருப்பினும், இப்போது வரை, இது கல்வி மெட்டீரியல்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, மேலும் கல்வித் திட்டம் மற்றும் Agora வழிகாட்டியின் இரண்டாவது பன்முறைச் செயல் மூலம், இதை நிவர்த்தி செய்ய வேண்டிய நேரம் இது.

கல்வி ரீதியான கருவியாக விவாதிப்பதன் மிகப்பெரிய நன்மைகளைக் காட்டும் ஆராய்ச்சி அமைப்புகள் வளர்ந்து வருகின்றன:

  • தனியாக பொது சொற்பொழிவு வழங்குவதை விட விவாதம் செய்வது விமர்சன ரீதியான சிந்தனையை மேம்படுத்துகிறது (ஆலன், பெர்கோவிட்ஸ், ஹன்ட் & லூடன், 1999), (ஹோவெல், 1943), (ஹில், 1993), (கிரீன்ஸ்ட்ரீட், 1993)
  • விவாதம் செய்வது என்பது ஆராய்ச்சி திறன்களை கற்பிப்பதற்கு கல்லூரி வளாகங்களில் மேற்கொள்ளப்படும் மிகவும் பயனுள்ள செயல்பாடு ஆகும்.
  • அனைத்து துறைகளிலும் தொழில் தொடங்கும் மக்களுக்கு விவாதம் செய்வது குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது (சென்டர், 1982) (ஹாப்ஸ் & சாண்ட்லர், 1991)
  • விவாத பங்கேற்பு மற்றும் மேம்பட்ட எழுத்து மற்றும் கேட்கும் திறன் இடையே தெளிவான தொடர்பு உள்ளது. (மெசுக், போண்டரென்கோ, ஸ்மித், & டக்கர், 2011), (பீட்டர்ஸ், 2009), (ஹூஸ்மேன், வேர், & க்ரூனர், 1972)
  • சமூகத்தில் விவாத பங்கேற்புக்கும் தலைமைப் பதவிகளை அடைவதற்கும் இடையே மிக உயர்ந்த தொடர்பு உள்ளது (கீலே & மேட்லான், 1984), (யூனியன், 1960)
  • அனுபவம் வாய்ந்த விவாதக்காரர்கள் பொது வாழ்க்கையில் வாய்மொழி ஆக்ரோஷத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொண்டுள்ளனர் (கோல்பர்ட், 1993)
  • விவாதம் பள்ளிகளில் இருந்து இடையில் நிற்கும் நிகழ்தகவை வெகுவாகக் குறைக்கிறது (மூன்று மடங்காக)  (ஆண்டர்சன் & மெசுக், 2012)
  • விவாதம் செய்வது என்பது முன்னாள் பங்கேற்பாளர்களால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும். உண்மையில் சொல்லப்போனால், இது மாணவர்களிடமிருந்து ஏகமனதான (99.26%) ஒப்புதலைப் பெறுகிறது, இது மற்ற கல்வி ரீதியான செயல்பாடுகளை விட அதிகமாகும். (பார்ச்சர், 1998)

 

Democrat Debate

 

பல விவாத போட்டிகள் மற்றும் விவாத விதி அமைப்புகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பாராளுமன்ற அமைப்புகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை (குறிப்பாக பிரிட்டிஷ் பாராளுமன்ற நடைமுறையை அடிப்படையாகக் கொண்டவை). வழக்கமாக, இவற்றில் எதை, எப்போது சொல்லலாம், எப்போது புதிய வாதங்கள் மற்றும் சான்றுகளை முன்வைக்கலாம் போன்ற விஷயங்கள் கடுமையான உத்தரவுடன் மாறி மாறி தொடரும். இருப்பினும், இன்றைய வேகமான உலகில், நாம் மற்ற விவாத வடிவங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக தொலைக்காட்சி, வானொலி அல்லது ஒத்த ஊடகங்களில் நடப்பவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் செயல்பாடுகள் மிகக் குறைவான விதையுடன், வேகமாக நடக்கும், அல்லது விவாதம் போன்ற சூழ்நிலைகள் மிகவும் நெகிழ்வானவை, நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லது வணிக பேச்சுவார்த்தைகள் போன்றவை, அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லது வணிக பேச்சுவார்த்தைகள் போல அத்தகைய விவாதம் போன்ற சூழ்நிலைகள் மிகவும் நெகிழ்வானவை இலகுவானதாக இருக்கும்.

விவாதத்திலும் அதன் சிக்கல்கள் உள்ளன. பேராசிரியர் நான்சி டும்போஸ்கியின் (டும்போஸ்கி, 2004) ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரை, விவாதங்கள் இரட்டைவாதத்தை நோக்கிச் செல்கின்றன என்றும், பங்கேற்பாளர்களை பிரச்சினைகளை இரண்டு கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கச் செய்து, வெற்றி அல்லது தோல்வி என்ற கேள்வியை நோக்கியே கவனம் செலுத்துகின்றன என்று வாதிட்டது. கூடுதலாக, பல ஆய்வுகள் பெண்கள் மற்றும் சில சிறுபான்மை குழுக்கள் சிந்திக்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தில் விவாதங்களின் எதிர் தரப்பு இயற்கையானது அல்ல என்று கூறுகின்றன.

முன்மொழியப்பட்ட விவாத விதிகள் பின்வருவனவற்றுக்கு இடையே மிக நுண்ணிய சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன:

  1. சந்திப்புகளை அதிக நேரம் ஆக்காமல் இருப்பது
  2. கல்வி நோக்கத்திற்காக சேவை செய்வது
  3. முடிந்தவரை யதார்த்தமாக இருப்பது
  4. பரவலான அளவில் உண்மையான வார்த்தை விவாதம் அல்லது விவாதம் போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய திறன்களை வளர்த்துக் கொள்வது.
  5. கிளப்பில் மோசமான சூழலை உருவாக்காமல் இருப்பது.
  6. விவாதங்கள் ஒரு அணி வெற்றியும், இன்னொரு அணி தோல்வியும் அடைந்து, ஒருமித்த கருத்தை ஊக்குவிப்பதையும் தாண்டி இருக்க அனுமதிப்பது

விஷயம் (1) என்பதை அனைத்து சந்திப்புகளுக்கும் குறைந்தபட்ச பாத்திரங்கள் இருக்க வேண்டும் என்ற தேவைகளை மாற்றுவதன் மூலம் எளிதாக அடைந்துவிடலாம், இதன் மூலம் கிளப்புகள் முற்றிலும் கிளாசிக்கல் சந்திப்பு அல்லது விவாதம்-மட்டுமே இடம்பெறும் சந்திப்பு அல்லது நேரம் அனுமதித்தால் இரண்டின் கலவையை கூட தேர்வு செய்யலாம். இருப்பினும், வருடத்திற்கு குறைந்தது நான்கு விவாதங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்கும், அவற்றை ஏற்பாடு செய்வதற்கு கல்வித் துறையின் துணைத் தலைவர் பொறுப்பாகும். ஒவ்வொரு பிரிவிற்கும் கல்வித் துறையின் துணைத் தலைவர் ஒதுக்கும் அணிகளின் எண்ணிக்கை மற்றும் நேரத்தைப் பொறுத்து ஒரு விவாதம் 30 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Agora கிளப்புகளை விவாதக் கிளப்புகளாக மாற்றாமல் இருப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது நம்முடைய இலக்கு அல்ல. இது ஆபத்தான விஷயமும் கூட, ஏனென்றால் விவாதங்கள் வேடிக்கையானதாகவும் உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும், மேலும் அவை தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகளை விட கொஞ்சம் "அடிமைத்தனத்தை" உருவாக்கும். விவாதங்கள் தற்போதுள்ள கல்வித் திட்டத்தை நிறைவு செய்வதாகவும், அதனை விரிவுப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும், அதை மாற்றும் வகையில் இருக்க கூடாது. மேலும், Agora விவாதங்களின் குறிக்கோளானது அவற்றில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு அது முக்கியமாக  விஷயங்களை கற்றுக் கொள்ளும் விதமாக இருக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Wednesday October 6, 2021 19:50:11 CEST by shahul.hamid.nachiyar.